Wednesday, November 23, 2011

பொண்ணின் பெருமை:


பொண்ணின் பெருமை:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை - திருக்குறள் 53

விளக்கம்: மனைவி நற்பண்பி உடையவளானால் வாழ்க்கையில்
இல்லாதது என்ன? எல்லாம் உண்டு.
அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில்
இருப்பு என்ன? ஒன்றுமில்லை

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின் - திருக்குறள் 54

விளக்கம்: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை
உண்டாகப் பெற்றால் பெண்ணைவிட
பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன.



பெண் வயிற்றில் உருவாகிப் பெண்பாலுண்டே
வளர்ந்தோம். பெண் துணையால் வாழ்கின்றோம்.
பெண்ணின் பெருமை உணர்வோம். - வேதாத்திரி மகரிஷி

கவர்ச்சி தரும் அலங்காரம் யாருக்காக ?
காண்பவர் நெஞ்சத்தில் என்ன தோன்றும் ?
கவர்ச்சியினால் அடைய உள்ள பயன்தான் என்ன ?
கண்ணியமாம் உடை ஒழுக்கம் கடைப்பிடிப்போம்
                                                                  - வேதாத்திரி மகரிஷி



பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்ந்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - அந்த
மாதர் அறிவைக் கெடுத்தார் - பாரதியார்

கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் அங்கே
புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள்
விளைவதில்லை.
கல்வியுள்ள பெண்கள் செந்நெற்கழனி - பாரதிதாசன்


கல்வி என்பது பள்ளிகல்வி, கல்லூரிகல்வி,
தொழிற்கல்வி மட்டுமன்று அவற்றைவிடஸ் சிறந்தது
பண்பாட்டுக் கல்வி அகக்கல்வி பரம்பரையாய்,
பெற்றோர்வழி, பழக்கவழக்கத்தால்
பிள்ளைகளுக்குச்சென்று சேர்ந்து,
பிள்ளைகளை மெல்ல, மெல்ல மேம்படுத்தி,
பிள்ளைகளை வாழவைக்கும் ஆன்மீகக் கல்வியாம்,
ஆன்மீகக் கல்வி அவசியம் தேவை ஏனெனில்
மக்கள் தெகையில் பாதி பெண்கள், மீதி அந்தப்
பெண்களின் கொடைகள்         - வேதாத்திரி மகரிஷி
 

ஒரு ஆண் கற்றால் ஒரு தனி நபர் கற்றதாகிறது.
ஒரு பெண் கற்றால் ஒரு குடும்பம் கற்றதாகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
பெண்ணைப் பெருமையை மதித்துப் போற்றுவோம்
தெகுப்பு கோப்பு - இவண